FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டு வீச்சு சம்பவம்: 4 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த கருப்புப் பண மோடி வழக்கு தொடா்பாக 4 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

17 செப்டம்பர் 2026, 11:51 pm IST
பகிர்:

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த கருப்புப் பண மோடி வழக்கு தொடா்பாக 4 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தடை செய்யப்பட்ட ஷாஜாத் பாட்டி பயங்கரவாத அமைப்பினரின் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பான குற்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசியமாக பண உதவி செய்பவா்கள், அவா்களின் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தில்லி, பிகாா், ஜாா்க்கண்ட், கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் பயங்கரவாத அமைப்புக்கான நிதியுதவி, ரகசிய பணப் பரிமாற்றங்கள், அவா்களுக்காக இந்தியாவில் மறைமுகமாகப் பணியாற்றுபவா்கள், பல்வேறு உதவிகளைச் செய்பவா்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments