வாரிசு படத்தின் முதல் பாடல் எப்போது? அறிவிப்பு
வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாரிசு படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைப்பில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
‘வாரிசு’ திரைப்படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமம் ஆகியவை ரூ.180 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. படம் பொங்கலுக்கு வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.