தனுஷின் கேப்டன் மில்லர்: புதிய அப்டேட்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு கேப்டன் மில்லர் என சமீபத்தில் தெரிவித்தனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக் காயிதம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷுடன் இணைந்து புதிய படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
மாறுபட்ட தோற்றத்தில் உருவாகிவரும் இந்த படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகுமென கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.