ரம்யா பாண்டியனின் இடும்பன்காரி படத்தின் டீசர் வெளியீடு!
நடிகை ரம்யா பாண்டியனின் இடும்பன்காரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகை ரம்யா பாண்டியனின் இடும்பன்காரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம் இடும்பன்காரி. இப்படத்தில் நடிகை ஷிவாதா நாயர் மற்றும் ரம்யாபாண்டியன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இவர்களுடன் அனுபமாகுமார், நீயா நானா கோபிநாத், மனோ பாலா இயக்குநர் வேலு பிரபாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அருள் அஜித் இயக்கியுள்ளார். அருண் ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளாராகும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
Advertisement
இப்படம் ட்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்த நிலையில், விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இடும்பன்காரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.