FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 7: ரவீனாவுடன் காதலா? உண்மையை உடைத்த மணி சந்திரா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான நடிகை விசித்ரா,  மணி - ரவீனா காதல் குறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது.

Updated On : 11 அக்டோபர் 2023, 1:29 pm IST
பகிர்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான நடிகை விசித்ரா,  மணி - ரவீனா காதல் குறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த சீசன்களை போல் இல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டைக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. 

Advertisement

Advertisement

முதல் வார முடிவில் மக்கள் குறைவாக வாக்களித்த அனன்யா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலை மற்றும் மனநிலை கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா மணி சந்திரா மற்றும் ரவீனாவிடம், நீங்கள் இருவரும் காதலர்கள் என்று கேட்க, அதற்கு ரவீனா எனக்கு புரியல நீங்க சொல்லுங்க மணி  என்று சொல்கிறார்.

மணி விசித்ராவிடம், நாங்கள் இருவரும் நெருங்கிய நன்பர்கள். ஒன்றாக நிகழ்ச்சிக்கு செல்கிறோம். ஒரு புரிதல் இருக்கு என்று மணி கூறினார். நாங்க இருவரும் காதலர்கள் என்றும் எங்கேயும் சொன்னது இல்லை ரவீனாவும் சொன்னார்.

ஆனால், நீங்க பேசியே வரவச்சுடுவீங்க என்று விசித்ராவிடம் மணி கூற, மணியை கன்னத்தில் அறைகிறார் ரவீனா.

இவர்கள் பேசும் காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments