முகப்பு
செய்திகள்

எடை குறைப்பு: ரசிகரின் கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த நடிகை ரித்திகா சிங்!

ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை ரித்திகா சிங் கலகலப்பாக பதிலளித்து உள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:48 AM
பகிர்:

பிரபல நடிகர்களைப் போலவே தற்போது நடிகை ரித்திகா சிங்கும் தனது உடலமைப்பை சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாற்றியிருக்கிறார். தமிழில் 'இறுதிச்சுற்று' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார். 

சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். 

உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் ஃபிட்டாகாவும் வைத்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவர் ரித்திகா. சமீபத்தில் சிறிது உடலெடை கூடியதற்காக தற்போது தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

ஜிம் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் ரித்திகா. அண்மையில் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுட் வருகிறார். அவரது ரசிகர்கள் இதனை வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு பதிவிட்ட கேள்வி பதில் பகுதியில் ரசிகர் ஒருவர், “உங்களது பின்பக்க சதையினை குறைக்காதீர்கள்; அது தேசிய சொத்து; பாதுகாக்கப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இதற்கு நடிகை ரித்திகா பதிலளித்துள்ளார்.

"எது எனது பின்பக்க சதை தேசிய சொத்தா...சிரிப்பாக இருக்கிறது. நான் ஒல்லியாக வேண்டும். சதை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருந்தால்தால் சரியாக இருக்கும். பின்பக்க சதையை நிச்சயமாக குறைப்பேன். 

எனக்கு பின்பக்க சதை குறைவாக இருப்பதே பிடிக்கும். ஜிம்னாஸ்டிக் செய்வதால் ஒல்லியாக இருப்பதே எனக்கு நல்லது. மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதை மிஸ் செய்கிறேன். விரைவில் பழையதுபோல ஆகுவேன். அதற்காக எனது பயிற்சிகளையும் உணவு பழக்கங்களையும் ஒழுங்குப்படுத்தி வருகிறேன்" எனப் பதிலளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.