FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டிரைலரா அல்லது பாடலா?: ஜவான் பட அப்டேட் கூறிய ஷாருக்கான்! 

நடிகர் ஷாருக்கான் ஜவான் படத்தின் புதிய அப்டேட்டினை கூறியுள்ளார். 

Updated On : 26 ஆகஸ்ட் 2023, 4:57 pm IST
பகிர்:

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. 

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் மீண்டும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது 3வது பாடலா அல்லது டிரைலரா என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார். 

டிரைலர் அல்லது பாடலுக்கு ஓட்டளித்து அதில் எது வெற்றி பெருகிறதோ கூறுங்கள். சமூக வலைதள நிபுணர்களின் விளம்பர யுக்தியையும் கற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். 

பின்னர் டிரைலருக்காக எடிட்டர் ரூபன் வேலை செய்து வருகிறார். தயாரிப்பாளர், இயக்குநர் பாடலை தந்துள்ளார்கள். தற்போது 3வது பாடலின் ப்ரோமோ விடியோவை பாருங்கள் என வெளியிட்டுள்ளார். அதன் பேர்- ராமய்யா வஸ்தாவய்யா. தெலுங்கு ரசிகர்களை குறிவைத்து எழுதப்பட்ட பாடலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து. 

மேலும் விஜய் சேதுபது, மணி ரத்னம், அட்லி இதில் யார் சிறந்தவர்கள் என்ற கேள்விக்கு, “மூவரும் அவரவர் துறையில் சிறப்பாக வேலை செய்கிறார்கள். அர்பணிப்புடன் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். தென்னிந்திய உணவுகள் சுவையாக உள்ளது” எனவும் ஷாருக்கான் பதிலளித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments