முகப்பு
செய்திகள்

7 மொழிகளில் வெளியாகும் மலையாளத் தொடர்!

மலையாளத்தில் தயாராகியுள்ள “பேரில்லூர் பிரீமியர் லீக்” என்ற தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜன. 5 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

Updated On : 13 டிசம்பர் 2023, 9:58 pm IST
பகிர்:

மலையாளத்தில் தயாராகியுள்ள “பேரில்லூர் பிரீமியர் லீக்” என்ற தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜன. 5 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சமீபத்தில்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள தொடரான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அரசியலை  நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான தொடராக “பேரில்லூர் பிரீமியர் லீக்” உருவாகியுள்ளது.  இந்த தொடர் வரும் 2024  ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

Advertisement

Advertisement

இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த  முன்னோட்ட (டிரெய்லர்) விடியோ, ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது

இந்தத் தொடரில் நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன்,  விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப  கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். 

E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தயாரித்துள்ள ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’  தொடரை புகழ் பெற்ற இயக்குநர் பிரவீன் சந்திரன் இயக்கியுள்ளார்,  தீபு பிரதீப் இந்த தொடரை எழுதியுள்ளார்.  

ஒளிப்பதிவு இயக்குநரான அனூப் வி ஷைலஜா, கிராமப்புற கேரளாவின் சாரத்தை அசத்தலான காட்சிகளுடன் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் பவன் ஸ்ரீ குமாரின் தலைசிறந்த எடிட்டிங் இக்கதையைத் திரையில் அழகாக உயிர்ப்பிக்கிறது. முஜீப் மஜீதின் இசை இந்த தொடரை  மெருகேற்றுகிறது.

‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ ஏழு வெவ்வேறு மொழிகளில் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் இந்த நகைச்சுவை தொடரை ரசிக்க முடியும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments