செய்திகள்

எதிர்நீச்சலை விஞ்சுமோ? 4 நாயகிகளுடன்... அதிக பொருள் செலவில் புதிய சீரியல்?

DIN


தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக பொருள் செலவில் புதிய தொடரை (சீரியல்) உருவாக்க பிரபல தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலான இல்லத்தரசிகளைக் கவர்ந்துள்ளது. மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் சில தொடர்கள், வயது வித்தியாசமின்றி இளம் தலைமுறையினரையும் ஈர்த்துள்ளது.

அவ்வபோது புதிய தொடர்களை அறிமுகம் செய்து ஒளிபரப்பிவரும் சன் தொலைக்காட்சி தற்போது பிரமாண்ட தொடர் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடர் இதுவரை இல்லாத வகையில் அதிக பொருள் செலவில் உருவாக்கப்படும் என்றும் தெரிகிறது. 

கண்ணான கண்ணே தொடரை தயாரித்த சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஏ.ஆர். ஃபிலிம் வோர்ல்ட் நிறுவனமும் இணைந்து இந்தத் தொடரை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தத் தொடரில் 4 கதாநாயகிகள், 50 துணைக் கதாபாத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் முன்னணி பிரலங்கள் அதிகமானோர்  முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஊதியம், இன்ன பிற அம்சங்களுக்காக  அதிக பொருள் செலவும் செய்யப்படுகிறது. விமர்சன ரீதியாகவும் எதிர்நீச்சல் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தற்போது திரைப்படங்களுக்கு இணையாக காட்சி அமைப்புகளுக்கு சின்னத் திரையிலும் மெனக்கெடல்கள் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில், தற்போது ஒரு எபிஸோடுக்கு அதிக பொருள் செலவிட முன்வருவது, சின்னத் திரை தொடர்களின் ஆரோக்கியத்தையே குறிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து

மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

SCROLL FOR NEXT