FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

‘தீர விசாரிப்பதே மெய்’: கமலை வாழ்த்திய பிரதீப் ஆண்டனி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப் ஆண்டனி கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 7 நவம்பர் 2023, 4:00 pm IST
பகிர்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப் ஆண்டனி கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் இருந்து போட்டியாளர் பிரதீப் ஆண்டனி ‘ரெட் கார்டு’ கொடுத்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனின் ‘டைட்டில் வின்னர்’ என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்பின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சக போட்டியாளர்களான மாயா, பூர்ணிமா, ரவீனா, மணி, நிக்சன் உள்ளிட்டோர் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டை கமல்ஹாசன் முன்பு முன்வைத்தனர்.

Advertisement

Advertisement

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து வீட்டிலிருந்த போட்டியாளர்களிடம் தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலானோர் பிரதீப்புக்கு எதிராக வாக்களித்ததால் கமல் வெளியேற்றினார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதீப் ஆண்டனி பதிலளிக்கும் போது, பாதியில் நிறுத்திய கமல்ஹாசன் பிரதீப்பின் பதிலை முழுமையாக கூற அனுமதிக்கவில்லை.  

இதனால், கமல்ஹாசன் நடுநிலையுடன் செயல்படவில்லை என்று பிக் பாஸ் ரசிகர்களால் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, எக்ஸ் தளத்தில் பிரதீப் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.

அதில், “சத்தியமாக சொல்கிறேன், நான் உங்களின் தீவிர ரசிகன் கமல் சார். உங்களுக்கு 69-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு நீங்கள் ஆற்றிய கலை மற்றும் பங்களிப்புகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீர விசாரிப்பதே மெய், நல்லா இருங்க என்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு, கமல் நடித்த வசூல்ராஜா படத்தின் காணொலி ஒன்றையும் இணைத்துள்ளார்.

பிரதீப் ஆண்டனியின் இந்த பதிவை பிக் பாஸ் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments