கோழிப்பண்ணை செல்லதுரை - சீனு ராமசாமியின் புதிய படம்!
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:54 AM
தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது.
இந்நிலையில், சீனு ராமசாமி அடுத்ததாகக் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வெளியானது கூஸ் முனிசாமி வீரப்பன் டிரைலர்!
Advertisement
புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பெரியகுளத்தில் துவங்கியுள்ளது.