கவனம் ஈர்க்கும் உன்னி முகுந்தனின் கந்தர்வா அறிமுக விடியோ!
மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் நடிப்பில் கந்தர்வா படம் உருவாகி வருகிறது.
தமிழில் சீடன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் உன்னி முகுந்தன். மலையாள நடிகரான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரது சமீபத்திய மாளிகப்புரம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவருக்கான மார்கெட் உயர்ந்துள்ளது. லிட்டில் பிக் பிலிம்ஸ் தயாரிக்கும் கந்தர்வா படத்தின் அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பிரவீன் பிரபாஹாரம், சுஜின் சுஜதன் இணைந்து எழுதியுள்ள இப்படத்தினை அறிமுக இயக்குநர் விஷ்ணு அரவிந்த் இயக்குகிறார்.
Advertisement
Advertisement
கந்தர்வரகளின் உலகம் என படக்குழு ஒரு விடியோவினை வெளியிட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக படம் உருவாகி வருகிறது என்பதன் அடையாளமாக இந்த விடியோ இருக்கிறது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளிலும் விடியோ வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.