இந்தியன் - 2 எப்போது?
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் - 2 திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் - 2 அறிமுக விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, சென்னை செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புச் சுவர்களில் இந்தியன் - 2 கமல்ஹாசனின் ஓவியங்கள் வரையப்பட்டு புரோமோஷனைத் துவங்கினர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இப்படத்தை வருகிற மே மாத இறுதியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் திரைக்குக் கொண்டு தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.