முகப்பு
செய்திகள்

விடாமுயற்சி டப்பிங்கை முடித்த அஜித்!

விடாமுயற்சி டப்பிங்....

Updated On : 7 டிசம்பர் 2024, 7:44 pm IST
பகிர்:


நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

Advertisement

Advertisement

டீசர் காட்சிகளையும் ஒளிப்பதிவையும் பார்த்தால் 1997 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற பிரேக்டவுன் (breakdown) என்கிற படத்தின் தழுவல்போல் தெரிகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை அஜர்பைஜானில் சில நாள்களுக்கு முன் துவங்கினார். தற்போது, தனக்கான டப்பிங்கை அவர் முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments