FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அலைபாயுதேவில் இதுதான் நடந்தது.. வைரலாகும் சிம்பு!

நடிகர் சிலம்பரசனின் பழைய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Updated On : 20 பிப்ரவரி 2024, 2:54 pm IST
பகிர்:

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றது. தற்போது, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48-வது படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், சிம்புவின் பழைய விடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த விடியோவில் சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களைப் பற்றி பேசியபோது, ’நாகரா’ கருவி குறித்து பேசினார். (நாகரா என்பது வசனம் பேசுவதை ஒலிவாங்கி மூலம் பதிவு செய்யும் முறை)

Advertisement

Advertisement

அப்போது, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் காட்சி ஒன்றில், நாகரா ஒலிவாங்கி காட்சி சட்டகத்துக்குள் (பிரேம்) வந்ததைக் கூறியிருப்பார்.

சில நாள்களுக்கு முன் இந்த விடியோவைப் பகிர்ந்த ரசிகர் ஒருவர், ’அலைபாயுதே படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால், சிம்பு சுட்டிக்காட்டிய தவறை இப்போதுதான் கவனித்தேன்’ எனப் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட பலரும் சிம்புவின் சினிமா அறிவைப் பாராட்டி வருவதுடன் அந்த விடியோவையும் வைரலாக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments