முகப்பு
செய்திகள்

கோட் படத்தில் எதிர்நீச்சல் தொடர் நடிகை: வெளியான புகைப்படம்!

விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் எதிர் நீச்சல் தொடர் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 23 ஜனவரி 2024, 6:39 pm IST
பகிர்:

விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் எதிர் நீச்சல் தொடர் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா உள்பட பல இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

நடிகை கனிகா - இயக்குநர் வெங்கட் பிரபு

இந்த நிலையில்,  எதிர் நீச்சல் தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கனிகா கோட் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், நடிகை கனிகா அதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது ரசிகர்கள் கோட் படத்தில் உங்களை பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதற்கு முன்னதாக இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்து இருந்தார் நடிகை கனிகா.

நடிகை கனிகா - இயக்குநர் மிஷ்கின் 

நடிகை கனிகா ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகமாகி சேரனின் ஆட்டோகிராஃப், அஜித்தின் வரலாறு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும், அந்நியன் படத்தில் சதாவுக்கும், சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும் பின்னனி குரல் கொடுத்துள்ளார்.

இதனால் நடிகை கனிகா கோட் படத்தில் நடித்துள்ளாரா அல்லது பின்னனி குரல் கொடுத்துள்ளாரா  என்ற தகவல் பின்வரும் நாள்களில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.