சேனாதிபதியின் படை... இந்தியன் - 2 புரோமோஷன்!
இந்தியன் - 2 திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தியன் - 2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 6) நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர். தற்போது, படம் வெளியாக 5 நாள்கள் உள்ள நிலையில், ஹைதராபாத்தில் புரோமோஷன் நிகழ்வில் இன்று படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.
மேலும், லண்டனிலும் இந்தியன் - 2 படத்தின் விளம்பரங்களும் நடன புரோமோஷங்களும் நடைபெற்றுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.