இறுதிக்கட்டத்தில் பைசன் படப்பிடிப்பு!
துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.
Advertisement
Advertisement
துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்ர். இதில், நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும், முக்கிய கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ‘பைசன் - காளமாடன்’ எனப் பெயரிட்டுள்ளனர். தற்போது, இதன் படப்பிடிப்பு 70% முடிவடைந்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.