கிறிஸ்துமஸ் வெளியீடாக கேம் சேஞ்சர்?
நடிகர் ராம் சரண் கேம் சேஞ்சர் திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனைத் தெரிவிக்கும் விதமாக, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது புகைப்படத்தையும் இறுதிநாளின் புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, கேம் சேஞ்சர் படத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.