சார் டீசர் அப்டேட்!
நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் சார் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வருகிறார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டு பின் சார் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனமும் படத்தின் வெளியீட்டு பொறுப்பில் இணைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சார் படத்தின் டீசர் வருகிற ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் போஸ் வெங்கட், ’கன்னிமாடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் பெரிதாக கவனிக்கபடவில்லை என்றாலும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.