FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சினிமா தயாரிப்பாளரை கரம்பிடித்த சீரியல் நடிகை!

ஜீ தமிழின் சீதா ராமன், சுமங்கலி, தாழம்பூர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

Updated On : 30 மார்ச் 2024, 4:58 pm IST
பகிர்:

சின்னத்திரை நடிகை அக்‌ஷிதா சினிமா தயாரிப்பாளர் பிரீதம் சுரேஷை திருமணம் செய்யவுள்ளார்.

சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன் புகைப்படங்களைப் பதிவிட்டு இந்த தகவலை நடிகை அக்‌ஷிதா தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நடிகை அக்‌ஷிதாவுக்கும், பிரீதம் சுரேஷுக்கும் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

- dinamani

நடிகை அக்‌ஷிதா என்னும் அக்‌ஷிதா பூபையா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அத்தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜீ தமிழின் சீதா ராமன், சுமங்கலி, தாழம்பூர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

தயாரிப்புப் பணிகளின்போது பிரீதம் சுரேஷுக்கும் அக்‌ஷிதாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொழில் ரீதியாக ஏற்பட்ட சந்திப்பு தற்போது வாழ்க்கை முழுவதும் தொடரும் உறவாக மாறியுள்ளது. நடிகை அக்‌ஷிதா தெலுங்கு திரைப்படங்களில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்.

- dinamani

பிரீதம் சுரேஷுடன் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை நடிகை அக்‌ஷிதா பகிர்ந்துள்ளார். என் விரலிடையே மின்னும் ஒன்று கூடியுள்ளது எனக் குறிப்பிட்டு நிச்சயதார்த்த படங்களை அக்‌ஷிதா பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments