இரண்டு தோற்றங்களில் நடிக்கும் அதர்வா, நிமிஷா!
டிஎன்ஏ படத்தில் அதர்வா, நிமிஷா கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் என இயக்குநர் கூறியுள்ளார்.
நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் டிஎன்ஏ. இப்படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கி வருகிறார்.
கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகி வருவதாக தகவல். இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நிமிஷா சஜயன் மலையாளத்தில் பிரபல நடியாக இருக்கிறார். தமிழில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸில் நடித்து கவனம் ஈர்த்தார்.
Advertisement
Advertisement
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், “இந்தப் படத்துக்கு இவர்களை (நிமிஷா, அதர்வா) தேர்ந்தெடுக்கக் காரணம் கதைதான். அதுதான் சுவாரசியாகவும் இருந்தது. இந்தப் படத்தில் அதர்வா 2, 3 புதிய தோற்றங்களில் வருவார். இதற்கு முன்பு பார்க்காத அதர்வாவை பார்க்கலாம்.
நடிகை நிமிஷாவும் 2 புதிய தோற்றங்களில் வருவார். நாங்கள் புதியதாக ஒன்றினை முயற்சித்துள்ளோம். அது நிச்சயமாக புத்துணர்வாக இருக்கும். இதற்கு பார்வையாளர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.