FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கருணாஸ் - நிமிஷா சஜயனின் என்ன விலை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

கருணாஸ் - நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான என்ன விலை படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

10 அக்டோபர் 2026, 4:11 pm IST
என்ன விலை படத்தின் போஸ்டர் - படம்: இன்ஸ்டா / நெட்பிளிக்ஸ் இந்தியா
பகிர்:

நடிகர் கருணாஸ், நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ’என்ன விலை’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் தேசிய விருது பெற்ற தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் என்ற படத்துக்கு கதை எழுதிய சஜீவ் பழூர் முதல்முறையாக ’என்ன விலை’ என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

கடந்த செப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வசூலில் பெரியதாக சாதனை படைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

மீனவரான தவசி முத்து (கருணாஸ்) ராமேஸ்வரத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தங்க ஆபரணத்தினால் திடீரென அவரது வாழ்க்கையே தலைக்கீழாக மாறுகிறது.

இந்தப் படத்தில் விஜயலட்சுமி வீரமணி, ஷாஷா ஷிவக்குமார், பாண்டி, மோக்ன ராமன், ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் அக்.15ஆம் தேதி நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Enna Vilai on OTT: Here's when and where Karunaas-Nimisha Sajayan film releases

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments