அந்த வாய்ப்பால் கண்ணீர் வந்துவிட்டது: நிமிஷா சஜயன்
என்ன விலை திரைப்படம் குறித்து நிமிஷா சஜயன் பேச்சு...
நடிகை நிமிஷா சஜயன் என்ன விலை திரைப்படம் குறித்துப் பேசியுள்ளார்.
கவனம் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பாராட்டு பெற்று வருபவர் நடிகை நிமிஷா சஜயன். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது தலைமுறையின் திறமையான நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஹிந்திப் படமான ’பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது, தமிழில் நடிகர் கருணாஸுடன் இணைந்து, ‘என்ன விலை‘ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படம் குறித்து பேசிய நடிகை நிமிஷா சஜயன், “ இயக்குநர் சஜீவ் என்னிடம் என்ன விலை கதையைச் சொன்னபோது, இரண்டு பெண் கதாபாத்திரங்களைக் கூறினார். எனக்காக எந்தக் கதாபாத்திரத்தை மனதில் வைத்திருக்கிறார் என்பதை அவர் சொல்லவில்லை. நான் கேட்டபோது, ‘நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்’ என்று மட்டும் கூறினார். இரண்டு கதாபாத்திரங்களும் மிக அழகாக எழுதப்பட்டிருந்தன. ரிஷியின் கதாபாத்திரமும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால், விஜயலட்சுமி அல்லது காஞ்சனா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேனா என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், நேர்மையாகச் சொல்வதென்றால், எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருப்பேன். விஜியின் கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருந்தேன். ஏனென்றால், அந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால், காஞ்சனா கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. அதனால், காஞ்சனா கதாபாத்திரத்தில் நான் நடிக்க போவதாக சஜீவ் என்னிடம் சொன்னபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அவரைக் கட்டிப்பிடித்து, ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டேன். இரண்டு கதாபாத்திரங்களுமே மிகவும் அழகாகவும், வலுவாகவும் எழுதப்பட்டிருந்ததால், எந்தக் கதாபாத்திரத்தை அவர் எனக்கு தரப் போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘அது உங்களுக்கான கதாபாத்திரம்’ என்று அவர் சொன்ன அந்த நொடி, எனக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணமாக அமைந்தது.
’என்ன விலை’ திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆழமான உணர்வுப்பூர்வமான பயணம் உள்ளது. சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
Actress Nimisha Sajayan has spoken about the film Enna Vilai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.