எல்சியூ: 10 நிமிட முன்னோட்டம்..! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் குறித்த 10 நிமிட முன்னோட்டம் குறித்து அறிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.
கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் எல்சியூ (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) வகைகளில் அடங்கும்.
தற்போது, ரஜினி படத்துக்குப் பிறகு எல்சியூ கதைகளை இயக்குவதாகக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், எல்சியூ குறித்த ஒரு குறும்படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்து தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாடு தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.