சிம்பு 48 படத்தில் மிருணாள் தாக்குர்?
நடிகர் சிம்புவின் 48வது படத்தில் நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்கிவருகிறார்.
பான் இந்திய படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமென தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபிகா படுகோன் கதாநாயகியாக இருந்தால் பொருத்தமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவருக்குப் பதிலாக புதிய நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீதா ராமம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்குர். ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களில் கலக்கி வருகிறார்.
இதையும் படிக்க: ராமாயணம் படத்துக்காக புதிய குரல் பயிற்சியில் ரன்பீர் கபூர்!
சமீபத்தில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இந்தப் போஸ்டரில் 2 சிம்பு இருப்பது போன்ற அட்டகாசமான போஸ்டர் வெளியாகியது.
இந்நிலையில் நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முருகதாஸ்- சிவகார்த்திகேயன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்தப் படம் அதற்கு முன்னதாகவே வெளியாகுமென கணிக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.