இதனால் திரையரங்குக்குச் செல்வதில்லை: செல்வராகவன்
திரையங்கம் செல்வது குறித்து பேசிய செல்வராகவன்....
இயக்குநர் செல்வராகவன் திரையரங்கம் செல்வது குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஜிவி பிரகாஷை வைத்து, மெண்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி - 2 ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் செல்வராகவன், “எனக்கு திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்க்கத்தான் பிடிக்கும். ஆனால், அங்கு சென்றால் பலரும் ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது நிகழும் எனக் கேட்கின்றனர். இதனாலேயே நான் திரையரங்குகளுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
நடிகர் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ள அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டார். ஆனால், பட்ஜெட் மற்றும் சில காரணங்களால் அப்படம் துவங்கப்படாமல் இருக்கிறது.
இதையும் படிக்க: டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு சொகுசுக் கார் பரிசு!
director selvaraghavan about watching films in theatres
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.