ரசிகர்களுடன் கூலியைப் பார்த்த லோகேஷ் கனகராஜ்!
ரசிகர்களுடன் கூலி திரைப்படத்தைப் பார்த்த லோகேஷ்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடன் கூலி திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஆமிர் கான், நாகர்ஜுனா, உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.
Advertisement
Advertisement
முக்கியமாக, அனிருத் பின்னணி இசை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோவையிலுள்ள திரையரங்கம் ஒன்றில் கூலி திரைப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து என்ன வரவேற்பு கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அவர்களுடன் படத்தைப் பார்த்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: கலாசாரத்தை பெண்கள் காப்பாற்ற தேவையில்லை: பேட் கேர்ள் இயக்குநர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.