சாய் பல்லவி பகிர்ந்த புதிய புகைப்படங்கள். படங்கள்: இன்ஸ்டா / சாய் பல்லவி.
செய்திகள்

இவை ஏஐ புகைப்படங்கள் அல்ல: சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி பகிர்ந்த புதிய புகைப்படங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்கள் அடங்கிய விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் இவையெல்லாம் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல, நிஜமான புகைப்படங்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

பிரேமம் முதல் அமரன் வரை சாய் பல்லவி நடித்துள்ள அனைத்து படங்களிலும் கவர்ச்சியில்லாத கண்ணியமான உடையிலேயே தோன்றியுள்ளார். கவர்ச்சியான காட்சிகளில் நடிக்காததால், ரசிகர்கள் மனதில் அவருக்கென்று தனியிடம் இருக்கின்றது.

இன்ஸ்டாகிராம், முகநூல் போன்று சமூக வலைதளப் பக்கங்களிலும் அடிக்கடி புகைப்படங்களையும் சாய் பல்லவி வெளியிடமாட்டார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, சாய் பல்லவி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை அவரது சகோதரி பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு பல விமர்சனங்களும் வந்தன. சிலர் அவரது புகைப்படங்களை பிகினியில் மோசமாக எடிட் செய்தும் வைரல் செய்தனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் அடங்கிய விடியோ ஒன்றினை வெளியிட்டு, அந்தப் பதிவில் இவையெல்லாம் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல, நிஜமான புகைப்படங்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தற்போது தென்னிந்தியாவின் முக்கியமான நடிகையாக மாறியுள்ளார்.

ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அதனாலும், அவர் எந்தப் புகைப்படங்கள் பதிவிட்டாலும் சில ரசிகர்கள் மோசமான கமெண்ட்ஸ்களை பதிவிடுகிறார்கள்.

Actress Sai Pallavi has posted a video with new photos on her Instagram page.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினேஷ் பிறந்த நாள்... வேட்டுவம் கிளிம்ஸ் வெளியீடு!

Special day! ரேஸுக்கு முன் அஜித்குமார்! Exclusive!

‘கொள்ளை கலாசாரத்தில்’ இருந்து இந்தியாவைக் காப்பாற்றியிருக்கும் பாஜக: பிரதமர் மோடி

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் காலமானார்!

ஆழ்மனதில் உன்னை வை... கீர்த்தி!

SCROLL FOR NEXT