விஜய் ஆண்டனியின் நூறு சாமி! ஓடிடி வெளியீட்டுத் தேதி!
விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளியான “நூறு சாமி” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, மூத்த இயக்குநர் சசியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “நூறு சாமி”. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கணவனை இழந்த பெண்ணுக்கு அவரது மகன் மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதும், அதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கதைகளமாகக் கொண்ட இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திக்ஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.
நூறு சாமி படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என இன்று (ஆக. 1) படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for the film "Nooru Saami," starring actor Vijay Antony, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.