ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி!
ஆஷா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ஆஷா எனப் பெயரிட்டுள்ளனர். சஃபர் சனல் இயக்கிய இப்படத்திற்கு ஜோஜூவும் திரைக்கதை எழுதியுள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி, விஜய ராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படம் வருகிற செப். 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் மாதம் ஓடிடியில் வெளியாகிறது.
The release date of the film Asha, starring Joju George and Urvashi, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.