FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மலையாளத்தில் அறிமுகமான ருக்மணி வசந்த்..! படப்பிடிப்பு தொடங்கியது!

நடிகை ருக்மணி வசந்த் மலையாளத்தில் முதல்முறையாக நடிக்கும் திரைப்படம் குறித்து...

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 3:16 pm IST
மலையாளத்தில் அறிமுகமான ருக்மணி வசந்த். - படம்: இன்ஸ்டா / ருக்மணி வசந்த்.
பகிர்:

நடிகை ருக்மணி வசந்த் மலையாளத்தில் முதல்முறையாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ருக்மணி வசந்த் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ருக்மணி வசந்த சப்த சாகரதாச்சே எலோ சைடு ஏ, சைடு பி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார். பின்னர், காந்தாரா படத்திலும் நடித்து கவனம் பெற்றார்.

தமிழி ஏஸ் படத்தில் அறிமுகமானாலும் சிவகார்த்திகேயனுடனான மதராஸி திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்து தனுஷுடன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அந்தப் படத்திலிருந்து இவர் விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மலையாளத்தில் நடிக்கும் ருக்மணி வசந்த் தனது படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்துள்ளார். நிவின் பாலி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தினை ஜெயா ஜெயா ஜெயா ஜெயா ஹே படத்தின் இயக்குநர் இயக்குகிறார்.

மார்ட்டின் பிரக்காட் ஃபிலிம்ஸ் மற்றும் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜு வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறார்கள்.

”மாலிவுட் திரை உலகத்துக்கு என்னை அன்புடன் வரவேற்றதுக்கு நன்றி” என ருக்மணி வசந்த் கூறியுள்ளார்.

summary

Rukmini Vasanth makes her Malayalam debut! Shooting has begun!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments