FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உசுரே நீதான்..! சூரியின் மண்டாடி படத்தின் 2வது பாடல்!

மண்டாடி படத்தின் புதிய மெல்லிசை பாடல் வெளியாகியுள்ளது...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 10:03 pm IST
மண்டாடி பட புதிய பாடல் வெளியீடு...
பகிர்:

நடிகர் சூரியின் “மண்டாடி” திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மண்டாடி”. இந்தப் படத்துக்கு, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகுப் போட்டிகளை மையமாகக் கொண்டு இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, இப்படத்தின் “மண்டாடி மண்டாடி” எனும் முதல் பாடல் வெளியாகி, அப்பாடலின் வரிகள் மற்றும் சூரியின் நடனம் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், மண்டாடி படத்தின் 2 ஆவது பாடலான “உசுரே நீதான் புள்ள” எனும் மெல்லிசை பாடல் இன்று (ஆக. 14) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வரும் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

summary

The second song from actor Soori's film "Mandadi" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments