இன்பநிலை காண வந்தாயோ... பாராட்டுகளைப் பெறும் பூர்ணா!
நடிகை பூர்ணாவின் நடனம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது...
நடிகை பூர்ணாவின் ஜெயிலர் - 2 நடனம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால் அதற்கான வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் இதன் முதல் பாடலான, ’அல்ல பொல்லேலோ’ பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியிருந்தார். கேரள பாணி நடனத்துடன் கவரும் உடலசைவுகளையும் கொடுத்ததால் பூர்ணாவின் ஆட்டம் தனியாக ரசிக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
ஜெயிலர் முதல் பாகத்தில் நடிகை தமன்னா, காவாலா பாடலுக்கு நடனமாடியிருந்தார். அப்பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதேபோல், பூர்ணா இரண்டாம் பாகத்தில் கவனம் ஈர்த்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராமிலும் இப்பாடல் வரிகளைப் போட்டு பூர்ணா போன்றே நடனமாடி பலரும் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
Actress Poorna's dance for Jailer 2 has been well-received by fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.