FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செப். 6 முதல் தொடங்கும் 4 மொழி பிக் பாஸ் சீசன்கள்!

செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிகள் குறித்து...

பிக் பாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பிரபலங்கள் - எக்ஸ்
பகிர்:

தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதுமட்டுமின்றி தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 10, மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 8, கன்னடத்தில் பிக் பாஸ் சீசன் 13 என மூன்று மொழிகளிலும் செப். 6 முதலே தொடங்கவுள்ளது.

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இதேபோன்று மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் மோகன் லாலும், கன்னடத்தில் பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியை கிச்சா சுதீப், தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கவுள்ளனர்.

Advertisement

Advertisement

தமிழில் இம்முறை போட்டியாளர்கள் வித்தியாசமான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவர், பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இதன்மூலம் பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களின் பிரதிநிதியாக இருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். இதனால் தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

summary

Bigg Boss seasons in four languages ​​starting from September 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments