FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அர்ஜுன் இயக்கும் சீதா பயணம் படத்தின் வெளியீட்டுத் தேதி!

சீதா பயணம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

சீதா பயணம் போஸ்டர்
பகிர்:

அர்ஜுன் இயக்கும் சீதா பயணம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

90களில் சண்டைக்காட்சிப் படங்களில் நடித்து ஆக்‌ஷன் கிங் பட்டத்தைப் பெற்றவர் நடிகர் அர்ஜுன். இவர் நடித்த ஜென்டில் மேன், முதல்வன், ரிதம், குருதிப்புனல், ஜெய்ஹிந்த், கர்ணா உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்தன. தென்னிந்த மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது, நடிகர் அர்ஜுன் நாயகனாக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான தீயவர் குலை நடுங்க படத்திலும் பிரதான பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

Advertisement

Advertisement

இதினிடையே, ஏழுமலை, ஜெய்ஹிந்த் படங்களை இயக்கி ரசிகர்களிடம் இயக்குநராகப் பாராட்டப்பட்ட அர்ஜுன், கடைசியாக ஐஸ்வர்யா அர்ஜுனை வைத்து சொல்லிவிடவா படத்தை இயக்கியிருந்தார்.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நடிகர் அர்ஜுன் ’சீதா பயணம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகிறார்.

நடிகரும் தன் உறவினருமான துருவ சார்ஜாவை நாயகனாக வைத்து இப்படத்தை அர்ஜுன் இயக்குகிறார். இதில், கிரி என்கிற பாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறார்.

மேலும், இந்தப் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், பிரகாஷ் ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

சீதா பயணம் திரைப்படம் காதலர் நாளை முன்னிட்டு வரும் பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

summary

The release date of Arjun's directorial film 'Seetha's Journey' has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments