முகப்பு
செய்திகள்

பகவந்த் கேசரி - ஜன நாயகன்! ஒரு இயக்குநருக்கு இப்படியும் நடக்குமா?

பகவந்த் கேசரி இயக்குநரின் புதிய படமும் வெளியாகவுள்ளது...

Updated On : 4 ஜனவரி 2026, 5:56 pm IST
விஜய், அனில் ரவிபுடி, பாலகிருஷ்ணா
பகிர்:

கேசரி திரைப்படத்தின் இயக்குநர் இயக்கியுள்ள புதிய திரைப்படமும் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பலரையும் கவர்ந்தாலும் இப்படம் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கில் ஹிட் அடித்த பகவந்த் கேசரியின் ரீமேக் என உறுதியாகியுள்ளது.

கேசரியின் மையக் கதையை எடுத்துக்கொண்டு விஜய்க்கு ஏற்ப மாறுதல்களும் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சுவாரஸ்யமான சம்பவமும் நிகழப்போகிறது. ஜன நாயகன் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதே போல, இயக்குநர் அனில் ரவிபுடி - நடிகர் சிரஞ்சீவி கூட்டணியில் உருவான, ’மன ஷங்கர வர பிரசாத் காரு’ திரைப்படமும் சங்கராந்தி வெளியீடாக ஜன. 14 அன்று திரைக்கு வருகிறது.

தான் இயக்கிய திரைப்படம் வேறு மொழியில் ரீமேக் செய்யப்பட்டு மீண்டும் தன் மொழிக்கு டப் செய்யப்பட்டு, தான் இயக்கிய புதிய படத்துடனே போட்டிக்கு வந்திருப்பது எந்த இயக்குநருக்கு நடந்திருக்கிறது? அனில் ரவிபுடிக்கு அமையவுள்ள இந்த அனுபவம் கோலிவுட், டோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.