பிரியமுடன் விஜய்! ஜன நாயகன் சிறப்பு காணொளியால் கண்கலங்கிய ரசிகர்கள்!
முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் இறுதியில் சிறப்பு காணொளி...
ஜன நாயகன் திரைப்படத்தின் இறுதியில் இடம்பெற்ற சிறப்பு காணொளி ரசிகர்களிடம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக ஜன நாயகன் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. முதல்வராக பதவியேற்றதால் படத்தில் விஜய் பெயர் இடம்பெறும் டைட்டில் கார்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் எனப் போடப்பட்டுள்ளது.
முக்கியமாக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை நோக்கி முதல்வர் விஜய் கையை வைத்து செய்த சைகையும் இந்த டைட்டில் இடம்பெற்றுள்ளதால், ரசிகர்கள் பலர் மிகுந்த ஆரவாரத்துடன் இதனைக் கொண்டாடினர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
மேலும், ஜன நாயகன் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் முடிந்ததும் விஜய்யின் இளவயது திரைப்பட தோற்றம் முதல் ஜன நாயகன் வரையிலான தோற்றங்கள் இடம்பெற்ற காணொளியும் பகிரப்பட்டது. அனிருத்தின் பிரியாவிடை பாடலுடன் இப்படங்கள் இடம்பெற்றிருந்தது, இறுதி புகைப்படத்தில் பிரியமுடன் விஜய் என்றிருந்ததும் ரசிகர்களைக் கண்கலங்க வைத்திருக்கிறது. பலரும் உணர்வுப்பூர்வமாக இருப்பதாகக் கூறி அந்த விடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
The special video featured at the end of the movie Jana Nayagan has deeply moved the audience.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.