தேசிய விருது வென்ற இயக்குநருக்கு திரைக்கதையில் உதவிய ஜோதிகா!
தேசிய விருது வென்ற இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு உதவிய ஜோதிகாவின் அறிவுரை குறித்து...
நடிகை ஜோதிகா கூறிய அறிவுரை தனக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக தேசிய விருது வென்ற இயக்குநர் வெங்கி அட்லூரி கூறியுள்ளார்.
தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தை நாக வம்சி தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு சூர்யா - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இந்தப் படம் வரும் ஆக.14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது:
ஜோதிகா மேடமுக்கு எனது கதைக்களம் மிகவும் பிடித்திருந்தது. மிகவும் மதிப்புமிக்க பரிந்துரைகள் சிலவற்றையும் எனக்கு வழங்கினார். நான் இந்தக் கதையை பலரிடம் கூறியுள்ளேன். ஆனால், ஜோதிகா மேடம் அளித்த அந்தக் குறிப்பிட்ட பரிந்துரை மிகவும் உதவிகரமாக இருந்தது. படம் வெளியான பிறகு அந்த மாற்றம் எதுவென சொல்லுகிறேன் எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வசனத்துக்காக இயக்குநர் வெங்கி அட்லூரி தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுதான் அவரது முதல் தேசிய விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Venky Atluri shares key details on Jyotika's suggestions for Vishwanath and Sons: 'It was very helpful'
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.