FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மாணவர்கள் ஆதரவுக்கு பணம் வாங்கினேனா? எதிர்மறையான கருத்துகளுக்கு ஜோதிகா பதிலடி!

நடிகை ஜோதிகாவின் ஆதரவுக்கு கிடைத்த எதிர்மறையான கருத்துகளும் அதற்கு அவரது பதிலடிகள் குறித்தும்...

Updated On : 25 ஜூலை 2026, 5:48 pm IST
நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா. - படம்: இன்ஸ்டா / பி ஸ்டூடியோஸ்.
பகிர்:

நடிகை ஜோதிகா நீட் தேர்வுக்காகப் போராடும் மாணவர்களுக்கு தான் அளித்த ஆதரவினால், எதிர்மறையாக கமெண்ட் செய்தவர்களுக்கு இன்ஸ்டா பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

நேற்றிரவு நடிகை ஜோதிகா, “தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும்” என நேரடியாகவே தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதேபோலவே, இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது ராஜிநாமாவை அறிவித்தார்.

Advertisement

Advertisement

அதற்குள்ளாக ஜோதிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் பணம் வாங்கியதாகவும் உள்பட பல்வேறு எதிர்மறையான கருத்துகளுடன் அவரை இழிவுபடுத்த சிலர் கமெண்ட் செய்தனர். நடிகை ஜோதிகா அதற்குப் பதிலடி கொடுத்தது வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜோதிகாவின் பக்கத்தில் ஒரு இணையவாசி, “அரசாங்கத்தின் உடைமைகளை சேதப்படுத்தியவர்களுக்கு ஆதரவா? இதையெல்லாம் அரசியல் ஆக்காதீர்கள்” எனக் கூற, நடிகை ஜோதிகா, “அரசாங்கம் மாணவர்களின் தலையையும் உடலையும் சேதப்படுத்தியதே அது குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?” எனப் பதிலளித்தார்.

மற்றுமொரு இணையவாசி, “தென்னிந்திய சினிமாவை ஜோதிகா தவறான வெளிச்சத்தில் காட்டுகிறார்” என்றார். அதற்குப் பதிலளித்த ஜோதிகா, “நான் தென்னிந்தியாவை நேசிக்கிறேன். அது எனது வீடு. நான் பாராட்டி பதிவிட்டுள்ளதையும் பாருங்கள். எதிர்மறையானதைத் தேர்வுசெய்யாதீர்கள்” என்றார்.

மற்றுமொருவர், “டூல்கிட் ஆக்டிவேட் செய்ததுபோல் இருக்கிறது. அனைத்து பிரபலங்களும் இன்று விழித்துக்கொண்டு சிஜேபிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், உண்மையான நீட் பிரச்னைக்கு அல்ல” என்றார். இதற்கு ஜோதிகா, “ஓ, டூல்கிட்! கற்பனை. நான் மாணவர்களுக்கு ஆதரவளித்துதானே எழுதியிருந்தேன். ஒருமுறை சரிபார்க்கிறேன் இருங்கள்” எனப் பதிலளித்துள்ளார்.

ஒருவர், “பணம் எதுவும் வாங்கிவிட்டீர்களா? என்ன திடீரென பிரபலங்கள் எல்லாம் ஆதரவு தருகிறீர்கள்?” எனக் கேட்க, ”கடைசி இரண்டு வரிகளைப் படியுங்கள் உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன்” எனவும் பதிலளித்துள்ளார்.

கடைசியாக ஜோதிகா சிஸ்டம் என்ற தொடரில் நடித்திருந்தார். அவர் நடித்த ஸ்ரீகாந்த் படத்துக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

summary

Jyotika hits back at critic alleging CJP paid her for supporting student protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments