துல்கர் சல்மானின் ஐயம் கேம் படத்தின் டிரைலர்!
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ஐயம் கேம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி குறித்து...
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ஐயம் கேம் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஐயம் கேம்.
இந்தப் படத்தில், நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக இப்படத்தில் இணைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The film crew has announced that the trailer for the movie Iyam Game, starring actor Dulquer Salmaan, will be released tomorrow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.