மிருணாள் தாக்குர் - பூஜா ஹெக்டேவின் புதிய திரைப்படம்! ஓடிடி வெளியீட்டுத் தேதி!
ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...
ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை வருண் தவானின் தந்தையும் இயக்குநருமான டேவிட் தவான் இயக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
ரொமான்டிக் காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, டிப்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் தௌரானி தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஜிம்மி ஷெர்கில், மனீஷ் பால், ஜானி லீவர், மெளனி ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் இரண்டு உறவுகளுக்கு மனைவி, காதலி) இடையே நிகழும் குழப்பமான சூழலை எதிர்கொள்ளும் நாயகனின் கதையை நகைச்சுவைக் கலந்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
The OTT release date for the movie Hai Jawani Toh Ishq Hona Hai has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.