FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் பாணியில் புதிய தொடர் ’லட்சுமி மெஸ்’!

புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ’லட்சுமி மெஸ்’ தொடர் குறித்து...

Updated On : 3 ஜூன் 2026, 1:02 pm IST
’லட்சுமி மெஸ்’ தொடர் - படம்: விடியோ கிளிப்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பாணியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன், ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ் இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகத்தில் நடிகை நிரோஷா, வி.ஜே.தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பாணியில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடருக்கு லட்சுமி மெஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் -2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களை இயக்கிய டேவிட் சார்லி இந்தத் தொடரை இயக்குகிறார். ஸ்பெக்ட்ரம் புரொடக்‌ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரிக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மளிகைக் கடை நடுத்தும் குடும்பத்தினரை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தொடர் உணவகம் நடத்தும் தந்தை மற்றும் மகன்களை பிரதானப்படுத்தி எடுக்கப்படுகிறது.

லட்சுமி மெஸ் தொடரின் முன்னோட்டக் காட்சியில், முக்கிய பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொடரின் கதையானது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்போல இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற ஜோடியான ஸ்டாலின் - நிரோஷா இணை, இந்தத் தொடரிலும் சேர்ந்து நடிக்கின்றனர்.

மேலும், இந்தத் தொடரில் மகேஷ் சுப்ரமணியம், ஷமந்தா, வசந்த் வசி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லட்சுமி மெஸ் ஒளிபரப்பு தேதி, நேரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

A new series is being produced in the style of Pandian Stores, which airs on Vijay TV.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments