த்ரிஷா, நயன்தாரா இணைந்து வெளியிட்ட ‘டபுள் ஆக்குபன்சி’ பட டிரைலர்!
டபுள் ஆக்குபன்சி படத்தின் டிரைலர் வெளியீடு பற்றி...
டபுள் ஆக்குபன்சி படத்தின் டிரைலரை த்ரிஷா, நயன்தாரா இணைந்து வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டபுள் ஆக்குபன்சி'.
ரொமான்டிக் பேன்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் சந்தோஷ் நாயகனாக நடித்துள்ளார். சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
பாதி நாள் ஆணாகவும், பாதி நாள் பெண்ணாகவும் மாறி வாழும் ஒருவனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களாக இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் டிரைலரை த்ரிஷா மற்றும் நயன்தாரா இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். படம் ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Trisha and Nayanthara jointly release the trailer for the movie ‘Double Occupancy’
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.