நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்
நடிகைகள் குறித்து நித்யா மெனன்....
நடிகைகள் சில எல்லைகளை வைத்திருக்க வேண்டும் என நித்யா மெனன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மெனன். இறுதியாக, தமிழில் தலைவன் தலைவி படத்தில் நடித்து வெற்றியையும் பெற்றார். அடுத்தடுத்து சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் வெளியான பெத்தி படத்தில் நடிகை ஜான்வி கபூரை மிகக் கவர்ச்சியாக காட்டியதால் சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து, படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா பெண்களை அவமரியாதை செய்ய அப்படியான காட்சிகளை வைக்கவில்லை என மன்னிப்பு கேட்டார்.
Advertisement
Advertisement
தற்போது, இதுகுறித்து நடிகை நித்ய மெனன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நடிகைகளைக் கவர்ச்சியாகக் காட்டுவது தென்னிந்திய சினிமாவில் மட்டும் நடப்பது அல்ல. புகழடைந்தால் போதும் என நினைக்கும் நடிகைகள் இந்தப் போக்கிற்குத் துணை போகின்றனர். ஆனால், ஆரம்பத்திலேயோ அல்லது படப்பிடிப்பிலேயோ தன்னை மிகக் கவர்ச்சியாகக் காட்டும்போதோ அல்லது தனக்கு விருப்பமில்லாத காட்சியை எடுக்கும்போது திட்டவட்டமாக மறுப்பை வெளிப்படுத்துவதுடன் நடிகைகள் தங்களுக்காக சில எல்லைகளையும் வைத்திருப்பது முக்கியம்” எனக் கூறியுள்ளார்.
Nithya Menen has stated that actresses should maintain certain boundaries.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.