FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிக் பாஸ் 10: முதல் வார தலைவியானார் நடிகை ஷாதிகா!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் வார தலைவியாக நடிகை ஷாதிகா தேர்வானது குறித்து...

8 செப்டம்பர் 2026, 4:29 pm IST
தன்யா, லஷ்மி பிரியா உடன் நடிகை ஷாதிகா - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் வாரத் தலைவியாக நடிகை ஷாதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வினோத் பாபு, ஷாமா, ஷாதிகா ஆகிய மூவர் இடையே தலைவர் பொறுப்புக்கான போட்டி நடைபெற்ற நிலையில், அதில் வெற்றி பெற்றி பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் தலைவராகத் தேர்வாகியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி செப். 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி இம்முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிரபலங்கள் மட்டுமே போட்டியாளர்களாக பங்கேற்றுவந்த நிலையில், இந்த சீசனில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் (ஷாமா, ஜேசன், முனியம்மா) போட்டியாளர்களாக விளையாடி வருகின்றனர். மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

பிக் பாஸ் போட்டியாளர்கள்

இவர்களுக்கிடையே இந்த வார தலைவரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் அனைவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்தனர்.

இதில் அதிக வாக்குகளைப் பெற்று வினோத் பாபு முதலிடத்தில் இருந்தார். ஷாதிகா இரண்டாவது இடம் பெற்றார்.

நடிகை ஷாதிகா

மூன்றாவது இடத்தை ஷாமா - ஜேசன் ஆகியோர் இடம்பெற்றனர். மூன்றாவது இடத்திற்காக நடந்த பேச்சுவார்த்தையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து ஜேசன் விலகினார்.

இதனைத் தொடர்ந்து வினோத் பாபு, ஷாதிகா, ஷாமா இடையே நடந்த போட்டியில் ஷாகிதா வெற்றி பெற்று இந்த வார தலைவராகத் தேர்வானார்.

summary

Bigg boss 10 tamil update : Actress Shathiga became the leader for the first week viral promo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments