நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்தவர்... சாலமன் பாப்பையா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா (90), சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
சுந்தரம் சாலமன் பாப்பையா என்ற இயற்பெயர் கொண்டவர். 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்தார்.
Advertisement
Advertisement
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-ஆவது ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 2021-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.
இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் உள்பட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் பதிவில், “பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார்.
நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும். அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Actor and Rajya Sabha MP Kamal Haasan has expressed his condolences on the passing of Tamil scholar Solomon Pappaiah.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.