FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாரி செல்வராஜின் மஞ்சணத்தி: படப்பிடிப்பு க்ளிம்ஸ் வெளியீடு!

மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி படத்தின் படப்பிடிப்பு க்ளிம்ஸ் விடியோ இன்று வெளியானது.

16 வினாடிகள் முன்பு
மாரி செல்வராஜுடன் இளையராஜா
பகிர்:

மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி படத்தின் படப்பிடிப்பு க்ளிம்ஸ் விடியோ இன்று வெளியானது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான பைசன் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அவர் இயக்கிய 5 படங்களும் தொடர் வெற்றிகளைப் பெற்றதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக அவர் வளர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் நவ்வி ஸ்டூடியோஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். மேலும், தனது சொந்தத் தயாரிப்பில் மஞ்சணத்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement

Advertisement

மஞ்சணத்தி திரைப்படத்தில் நடிகர்கள் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை சில நாள்களுக்கு முன் இளையராஜா தேனியில் தொடங்கி வைத்தார். அங்கு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட க்ளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இப்படம் பற்றி மாரி செல்வராஜ் பேசுகையில், ”மஞ்சணத்தி திரைப்படம் 4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. திருநெல்வேலியிலிருந்து காஷ்மீர் வரை நிகழும் பெரிய திரைப்படமாக உருவாகிறது. 90 நாள்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளோம். மஞ்சணத்தியை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

The shooting of the film Manjanathi, directed by Mari Selvaraj, was released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments