சமூகத்தின் மற்றொரு பக்கத்தை அழுத்தமாகப் பேசும் அபர்ணதியின் புதிய திரைப்படம்!
தி கிராண்ட் மாஸ்டர் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பாக...
வி6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் அழுத்தமாகப் பேசும் படைப்பை உருவாக்கியுள்ளார்.
தூய்மைப் பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி, சமூகத்தின் மற்றொரு பக்கத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'The Grand master' is a film produced by Velayutham on behalf of V6 Film Private Limited and directed by Vetrichezhiyan; it is a creation distinguished by its unique social concern.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.