FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழர் இயக்கத்தில் உருவாகும் முதல் பான் இந்திய குஜராத்தி திரைப்படம்!

தமிழ் இயக்குநர் இயக்கும் குஜராத்தி திரைப்படம்...

15 செப்டம்பர் 2026, 5:49 pm IST
பகிர்:

குஜராத்தி சினிமாவின் முதல் பான் இந்திய திரைப்படம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுல் இந்தியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அதுல் எம். போசாமியா தயாரித்து வழங்கும் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’, குஜராத்தி திரையுலகின் முதல் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.

‘ஸ்ரீ கேசரி நந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் குஜராத்தி மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி என மொத்தம் 7 இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் எழுதி இயக்குகிறார்.

Advertisement

Advertisement

பிரபல நடிகர்களான அர்பித் ரங்கா மற்றும் மௌலிக் சௌஹான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

சர்வதேச தரத்திலான காட்சியமைப்பை உருவாக்குவதற்காக, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். புகழ்பெற்ற கன்னட இசையமைப்பாளர் அபிநந்தன் காஷ்யப் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் மஹிபால் சிங் ரணாவத், ராஜேஷ் தாக்கூர், ஹிரேன் படேல் மற்றும் பரேஷ் ஜக்டா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். ஸ்ரீ கேசரி நந்தன் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ராம நவமி தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

An announcement has been made regarding the first pan-Indian film from Gujarati cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments